உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மீண்டும் இயங்க தொடங்கிய காதர்பேட்டை பனியன் பஜார்

Published On 2023-11-06 16:34 IST   |   Update On 2023-11-06 16:34:00 IST
  • வியாபாரிகள் ஏறத்தாழ 40 ஆண்டாக செகண்ட்ஸ் பனியன் ஆடை ரகங்களை விற்பனை செய்து வந்தனர்.
  • முன்னர் பஜார் இயங்கிய இடத்தில் பாதி இடத்தில் மட்டும் கடைகள் அமைக்க அனுமதி கிடைத்தது.

திருப்பூர்:

திருப்பூர் நஞ்சப்பா பள்ளி சாலையில் தனியார் நிலத்தில் காதர்பேட்டை பனியன் பஜார் இயங்கி வந்தது. அங்கு 50 வியாபாரிகள் ஏறத்தாழ 40 ஆண்டாக செகண்ட்ஸ் பனியன் ஆடை ரகங்களை விற்பனை செய்து வந்தனர்.

தனியாருக்கு சொந்தமான இடத்தில் நில வாடகை அடிப்படையில் இந்த கடைகள் இயங்கி வந்தன. கடந்த ஜூன் 23ந் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கடைகள் அனைத்தும் எரிந்தன. முற்றிலும் பனியன் மற்றும் ஆடை ரகங்கள் என்ற நிலையில் தீ கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக பரவியது. சில இரு சக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலானது.

இதனால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகினர். பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவி செய்தனர். இந்நிலையில் மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரம் துவங்க வியாபாரிகள் ஆயத்தம் செய்தனர்.நில உரிமையாளர்கள் தங்கள் இடத்தை அளந்து வேலி அமைத்தனர்.

நீண்ட இழுபறிக்கு பின் முன்னர் பஜார் இயங்கிய இடத்தில் பாதி இடத்தில் மட்டும் கடைகள் அமைக்க அனுமதி கிடைத்தது.இதனால் வியாபாரிகள் தங்கள் கடை அளவை பாதியாக குறைத்து அதற்கேற்ப ெஷட் அமைத்து கடைகளை அமைத்து கொண்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் பனியன் பஜார் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News