உள்ளூர் செய்திகள்
மருத்துவ காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் திருப்பூரில் 13-ந்தேதி நடக்கிறது
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 10 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது.
- கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண்.240-ல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 10 பணியிடங்களை மாவட்ட நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது.
இதற்காக வருகிற 13-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண்.240-ல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு https://tiruppur.nic.in/notice-category/recruitment/ என்ற இணையதள முகவரியிலும், 0421 2478503 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.