பயனாளிகளுக்கு நல உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கிய காட்சி. அருகில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் பலர் உள்ளனர்.
ஊத்துக்குளியில் பயனாளிகளுக்கு நல உதவி - கலெக்டர் வழங்கினார்
- மானியத்தின் மூலமாக பெறப்பட்ட உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்
ஊத்துக்குளி:
ஊத்துக்குளியில் இன்று தனியார் மண்டபத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி வட்டாரத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை, சமூக நலத்துறை, பொது சுகாதாரம் ,நோய் தடுப்பு துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் வினீத் பார்வையிட்டார்.
பார்வையிட்ட பிறகு அந்தந்த துறைகளில் மானியத்தின் மூலமாக பெறப்பட்ட உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி தீயணைப்புத் துறையின் சார்பாக தீ விபத்து ஏற்படும்போது தற்காத்துக் கொள்ள செயல் விளக்க செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி யூனியன் சேர்மன் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.