உள்ளூர் செய்திகள்

 டிராகன் பழம்.

உடுமலையில் டிராகன் பழம் கிலோ ரூ.180க்கு விற்பனை

Published On 2022-07-06 10:31 IST   |   Update On 2022-07-06 10:31:00 IST
  • டிராகன் பழத்தில் மருத்துவ குணம் நிறைந்த இப்பழத்தில் மூன்று வகை உள்ளன.
  • டிராகன் பழம் இதய நோய், ரத்த அழுத்தம், குடல் இறக்க நோய்களை கட்டுப்படுத்தி உடலுக்கு வலிமை தரும்.

உடுமலை :

உடுமலையில் டிராகன் பழம் கிலோ ரூ.180 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிராகன்எனும் மருத்துவ குணம் நிறைந்த இப்பழத்தில் மூன்று வகை உள்ளன. தோல் பிங்க் நிறத்தில் வாழைப் பூ போன்றும், சதைப்பகுதி கொழகொழப்புடன் வெள்ளை நிறத்திலும், மற்றொரு வகையில் தோல் மஞ்சள் நிறத்திலும், இன்னொரு வகையில் சதை பகுதி சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

இப்பழத்தில் சிறிய அளவில் பல நூறு விதைகள் இருக்கும்.இப் பழத்தினுள் சிறிய அளவில் நிறைய விதைகள் இருக்கும். அவற்றுடன் சேர்த்தே இப் பழத்தை உண்ண வேண்டும். இதய நோய், ரத்த அழுத்தம், குடல் இறக்க நோய்களை கட்டுப்படுத்தி உடலுக்கு வலிமை தரும். செரிமான சக்தியை அதிகரிக்க செய்து, மலச்சிக்கலை இப்பழம் நீக்குகிறது. இப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் நேரடியாகவும், மற்றவர்கள் நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம். ஐஸ்கிரீமுடன் சேர்த்தோ, காய்ச்சிய பாலோடு சேர்த்து 'ஜூஸ்' தயாரித்தோ சாப்பிடலாம். தற்போது அதிக அளவு கிடைக்கும் பழங்களை கிலோ ரூ.180க்கு விற்பனையாகிறது .ஒரு பழம் 200 முதல் 400 கிராம் எடையுடன் உள்ளது. இப்பழம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அறிந்தவர்களே வாங்கி செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இப்பழம் கிடைக்கிறது.

தற்போது இந்த பழம் உடுமலையில் அண்ணா குடியிருப்பில் உள்ள வேலுச்சாமி என்பவர் வீட்டில் காய்த்துள்ளது. இப்பழத்தை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News