ஸ்ரீ செல்வ கணபதி கோவிலில் உண்டியல் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
- நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ கணபதி கோவில் உள்ளது.இந்த கோவிலில் கோபிநாத் என்பவர் பூசாரியாக உள்ளார்.நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தார்.
அப்போது கருவறை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்த பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது. கோவில் உண்டியலில் 10 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என தெரிகிறது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.