உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் 5½ லட்சம் குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை

Published On 2023-07-13 10:25 GMT   |   Update On 2023-07-13 10:25 GMT
  • 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 149 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் நடந்த முகாமில் 74 பேருக்கும், காங்கயத்தில் நடந்த முகாமில் 149 பேருக்கும் புதிதாக மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டன. திருநங்கைகளுக்கு நடத்தப்பட்ட முகாமில் 60 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை எடுக்காதவர்கள் ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள்) ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73730 04271 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News