உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வற்றல் மிளகாய் உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-07-05 07:47 GMT   |   Update On 2022-07-05 07:47 GMT
  • வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து பச்சை மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காது.
  • சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அறுவடைப்பணிகளை திட்டமிட்டு மதிப்பு கூட்டுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடுமலை :

உடுமலை சுற்றுப்பகுதியில் சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்களை பின்பற்றி காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.இதில் பச்சை மிளகாய், பாப்பனூத்து, குட்டியகவுண்டனூர், ஆண்டியகவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் சாகுபடியாகிறது.இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு சாகுபடி பரப்பு அதிகரித்து பச்சை மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காது.எனவே சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அறுவடைப்பணிகளை திட்டமிட்டு மதிப்பு கூட்டுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மிளகாய் சாகுபடியில் ெஹக்டேருக்கு 13 மெட்ரிக்., டன் வரை விளைச்சல் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். விலை வீழ்ச்சியின் போது பச்சை மிளகாயை செடியிலேயே பழுக்க விட்டு பின்னர் அறுவடை செய்கின்றனர்.இதில் விதைத்தேவைக்கு குறிப்பிட்ட சதவீதத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும் உலர்களங்களில் காய வைத்து வற்றல் மிளகாயாகவும் விற்பனை செய்கிறார்கள்.

செடியிலேயே மிளகாயை காய விடுவதால்அவற்றின் எடை வெகுவாக குறைந்து ெஹக்டேருக்கு 3 மெட்ரிக்., டன் வற்றல் மிளகாய் கிடைக்கிறது.பச்சை மிளகாயை விட, வற்றலுக்கு அதிக விலை கிடைப்பதால் உடுமலைப்பகுதி விவசாயிகள் கிராம உலர்களங்களில், வற்றலை காய வைத்து தரம் பிரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வற்றல் மிளகாய்க்கு உள்ளூர் மற்றும் பிற மாவட்ட சந்தைகளில் ஆண்டு முழுவதும் தேவை உள்ளது. எனவே இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். கிராமம்தோறும் உலர் களங்கள் அமைத்து கொடுத்தால், இத்தகைய மதிப்பு கூட்டு பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News