உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வீட்டுவசதி வாரியம் மூலமாக கிரையப்பத்திரம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2023-03-18 10:01 IST   |   Update On 2023-03-18 10:01:00 IST
  • மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
  • மே மாதம் 3-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

 திருப்பூர் :

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் உள்ளனர். அவர்கள் அதை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மூலமாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் முதலிபாளையம், பல்லடம் நிலை-1, நிலை-2, பெரியார் நகர், உடுமலை, வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் திட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அவர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாதவர்கள், வட்டி தள்ளுபடியில் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகையை நடைமுறையில் உள்ள தனிவட்டியுடன் மூன்று தவணையாகவோ செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். எந்த காரணத்தைக்கொண்டும் காலநீட்டிப்பு செய்யப்படாது. எனவே ஒதுக்கீடுதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கிரையப்பத்திரம் பெற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை கோவை வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News