உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கடன் பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து லாரி நிறுவன மேலாளர் தற்கொலை

Published On 2023-07-15 16:42 IST   |   Update On 2023-07-15 16:42:00 IST
  • கடன் பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
  • ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள்.

திருப்பூர்:

திருப்பூர் கூலிபாளையம் ரெயில் நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இதில் இறந்தவர் திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையத்தை சேர்ந்த சரவணன் (வயது 42) என்பது தெரிய வந்தது. அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கையில், சரவணன் லாரி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் ரெயில் முன் பாய்ந்துதற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News