உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து, பச்சை பயிறு நேரடி கொள்முதல் - வேளாண் அதிகாரிகள் தகவல்

Published On 2023-03-07 06:08 GMT   |   Update On 2023-03-07 06:08 GMT
  • விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது.
  • 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூரில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, உளுந்து, பச்சைபயறு ஆகியவற்றை, விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்கிறது. பயறு வகைகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையான, உளுந்து கிலோ ரூ.66; பச்சைப் பயறு கிலோ, ரூ.77.55க்கு, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

'நடப்பு ராபி பருவத்தில், திருப்பூர், கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில், 60 ஆயிரத்து, 203 டன் உளுந்து கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில், 12 ஆயிரத்து, 605 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News