கோப்புபடம்.
புதிய போலீஸ் நிலையம் அமைக்க கோரிக்கை
- பல்லடம் அருகே கரைப்புதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
- வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பல்லடத்தில் வசிக்கின்றனர்.
திருப்பூர் :
பல்லடம் அருகே கரைப்புதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் போலீஸ் எல்லை திருப்பூர், நொச்சிபாளையம் பிரிவிலிருந்து காரணம்பேட்டை வரை பரந்து விரித்துள்ளது. வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பல்லடத்தில் வசிக்கின்றனர்.
திருட்டு, கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள் விற்பனை, சட்டஒழுங்கு பிரச்சினைகள் அதிகளவில் நடைபெறுவதால் பல்லடம் போலீசார் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளில் மட்டும் ஒருலட்சத்துக்கும்மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்த 3 ஊராட்சி பகுதிகளிலும் குற்ற செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. எனவே, கரைப்புதூர் ஊராட்சியில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.