உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காட்சி.

 

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

Published On 2022-08-18 11:04 GMT   |   Update On 2022-08-18 11:04 GMT
  • இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் பாடுபடுவேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
  • மேயர் தினேஷ்குமார் தலைமையில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதில் நான் சாதி, இன , வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்து கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளை பின்பற்றியும் தீர்த்து கொள்வேன் என்றும் இதனால் உறுதிமொழி அளிக்கிறேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News