உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவியிடம் நகை பறிக்கப்பட்ட காட்சி

தாராபுரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியிடம் நகைபறிப்பு

Published On 2023-04-04 12:26 IST   |   Update On 2023-04-04 12:26:00 IST
  • சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று வருகிறார்.
  • இவர் தளவாய்பட்டினத்தில் இருந்து தாராபுரத்திற்கு தனியார் பேருந்தில் சென்றார்.

தாராபுரம் : 

தாராபுரம் தளவாய்பட்டினம் கிராமம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா (வயது 22). சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பயின்று வருகிறார். சம்பவத்தன்று இவர் தளவாய்பட்டினத்தில் இருந்து தாராபுரத்திற்கு தனியார் பேருந்தில் சென்றார்.தாராபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய போது அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது குறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கீர்த்தனா கூறினார். தனியார் பேருந்தில் உள்ள சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அடையாளம் தெரியாத சுடிதார் அணிந்த 2 பெண்கள் மாணவி கீர்த்தனாவை திசை திருப்பி திருடியது சிசிடிவி. கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது . தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிய பெண்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News