உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கோகோ நவீன சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு உடுமலையில் நாளை நடக்கிறது

Published On 2022-08-24 10:51 GMT   |   Update On 2022-08-24 10:51 GMT
  • ஊடுபயிராகவும் தனி பயிராகவும் கோகோ சாகுபடி பயன் அளிப்பதாக உள்ளது.
  • விவசாயிகளுக்கு வழிகாட்டல் வழங்கும் கருத்தரங்கு.

உடுமலை :

உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராகவும் தனி பயிராகவும் கோகோ சாகுபடி செய்வது சிறந்த பயன் அளிப்பதாக உள்ளது. இதனால் ஒரு சில விவசாயிகள் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அவர்களுக்கான வழிகாட்டல்கள் வழங்கும் வகையிலும் புதிய விவசாயிகளுக்கு கோகோ சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கும் வகையிலும் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 9 மணியளவில் உயர் விளைச்சலுக்கான நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் உடுமலை வட்டார ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அருகில் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News