உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்திற்கு எதிராக சி.ஐ.டி.யு., தீர்மானம்

Published On 2022-08-23 06:55 GMT   |   Update On 2022-08-23 06:55 GMT
  • சி.ஐ.டி.யு. 12-வது மகாசபை கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது.
  • சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் (சி.ஐ.டி.யு.) 12-வது மகாசபை கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ரங்கராஜ் தொடக்கி வைத்தார்.

முன்னதாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார்.துணைத்தலைவர் சுதாசுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பு வேலையறிக்கையையும், பொருளாளர் அருண் வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். இதில் மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, வாகன அழிப்புக் கொள்கை, சேவைக் கட்டணம் தண்டனைத்தொகை மற்றும் போக்குவரத்து, காவல்துறையின் கெடுபிடிகள், இ.எம்.ஐ. என்ற மாதாந்திர தவணை நெருக்கடி, மோட்டார் வாகன சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News