உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6,600 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-09-12 10:57 GMT   |   Update On 2022-09-12 10:57 GMT
  • 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
  • 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் இலவசமாக செலுத்தப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில், 36வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 1,341 இடங்களில் நேற்று நடந்தது.மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணி முதல், இரவு,7மணி வரை நடந்த முகாமில் 6,600 பூஸ்டர் உட்பட 22 ஆயிரத்து 135 தடுப்பூசி செலுத்தப்பட்டது.இம்மாதம் 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் இலவசமாக செலுத்தப்படும். அதன் பின் கட்டணம் செலுத்தி தான் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பால், நேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதில், மாவட்ட மக்கள் ஆர்வம் காட்டுவர் என சுகாதாரத்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று 6,600 பூஸ்டர் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News