உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தக் காட்சி.
பல்லடம் அருகே கழிவுநீர் குழாய் அமைக்க பூமி பூஜை
- பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு திட்டப் பணியை துவக்கி வைத்தார்.
- ரூ 4.2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மங்கையர்க்கரசி கனகராஜ் பொது நிதியில் ரூ 4.2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு திட்டப் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் மங்கையர்கரசி கனகராஜ், 5-வது வார்டு, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.