உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வேளாண் பல்கலைக்கழக இளநிலை பிரிவில் 750 இடங்கள் அதிகரிப்பு

Published On 2023-03-25 06:14 GMT   |   Update On 2023-03-25 06:14 GMT
  • 12 இளமறிவியல் படிப்புகள் உள்ளன.
  • 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆய்வு செய்யப்பட்டது.

திருப்பூர் :

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ கத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகளில் 12 இளமறிவியல் படிப்புகள் உள்ளன.இணைப்பு கல்லூரி களில் மாணவர்களின் சேர்க்கைக்கு கூடுதல் இடம் ஒதுக்க, கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.பல்கலைக்கழகம் தரப்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு கல்லூரிக ளின் உள் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான இடங்கள் அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. இது குறித்து டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், உரிய ஆய்வுகளுக்கு பின் கல்லூரி களின் தரம், கட்டமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அனுமதி வழங்கியுள்ளோம்.

ஒரு கல்லூரிக்கு வசதி குறைபாடு காரணமாக மாணவர்கள் எண்ணிக்கை 42 சதவீதம் குறைத்துள்ளோம். அதிகபட்சம் ஒரு கல்லூரியில் 20 சதவீத இடங்கள் மட்டும் அதிகரித்துள்ளோம். மொத்தம் 750 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

Tags:    

Similar News