உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்ட கூட்டம்

Published On 2023-05-26 07:51 GMT   |   Update On 2023-05-26 07:51 GMT
  • தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.
  • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

உடுமலை :

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தகடவு, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, பண்ணைக்கிணறு, கொசவம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இக்கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி, கால்நடை, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, திட்டத்தின் நோக்கம், வேளாண் துறை சார்பில் தரிசு நில மேம்பாடு, உபகரணங்கள் மானிய விலையில் வழங்குதல், தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.

கிராமங்களுக்கு தேவையான தடுப்பணை, குட்டைகள், சமுதாய உறிஞ்சு குழிகள், ரோட்டோர மரக்கன்று நடுதல், வண்டிப்பாதை, மண் சாலை அமைத்தல், உலர் களம், தானிய கிடங்கு கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பண்ணை குட்டை, வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.திட்ட கிராமங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், ஆமந்தகடவு - கோதண்டபாணி, கொங்கல்நகரம் -- செந்தில்குமார், சோமவாரபட்டி - ஜெயலட்சுமி, பண்ணைக்கிணறு - அசாருதீன், கொசவம்பாளையம் - கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டு கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டது.

Tags:    

Similar News