உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

செவிலியர் பயிற்சி பெற ஆதிதிராவிடர்- பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2023-10-04 16:25 IST   |   Update On 2023-10-04 16:25:00 IST
  • இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி பெறுவார்கள்
  • 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த மாணவர்களுக்கு டிசிஎஸ்-லான் மற்றும் அப்போலோமெட்ஸ்கில்ஸ் எனப்படும் செவிலியர் பயிற்சி இணைந்து வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற 2021,2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டப்படிப்பில் நர்சிங் துறையில் பொது மருத்துவம் மற்றும் மருத்துவச்சி மற்றும் அடிப்படை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 20 முதல் 28 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அப்போலோமெட்ஸ்கில்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது இணையதளம் வழியாக நடைபெறும்.

இத்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பைன் எனப்படும் செவிலியர் பயிற்சி பெறுவார்கள். இப்பயிற்சியானது இரண்டு முறைகளில் நடைபெறும்.முதல் 2 வாரங்களில் இணைய வழிகற்றல் முறையிலும் அடுத்த 4 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு பயிற்சியும், பயிற்சி காலங்களில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் முன்னணி மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501 (ம) 503, 5 வது தளம்,மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604. 94450 29552, 0421-2971112 என்ற முகவரி, செல்போன், தொலைபேசி எண்களை அணுகலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News