உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தமிழக-கேரள எல்லையில் யானைகள் உயிரிழப்பை தடுக்க வனத்துறை அதிரடி நடவடிக்கை

Published On 2023-09-08 12:32 IST   |   Update On 2023-09-08 12:32:00 IST
  • இந்த நாட்டு வெடியை, பழம் என நினைத்து கடிக்கும் யானைகள் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றன
  • யானைகள் தமிழகத்துக்குள் வந்து உயிரிழப்பதையும், வனத்துறையினர் கண்டறிந்தனர்.

உடுமலை : 

காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்க அவுட்டுக்காய் எனும் நாட்டுவெடியை சிலர் பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டு வெடியை, பழம் என நினைத்து கடிக்கும் யானைகள் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றன.

இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள, கேரள மாநிலப்பகுதிகளில் அதிக அளவு அவுட்டுக்காய் வெடி பயன்படுத்தப்படுவதாகவும், அங்கு காயமடையும் யானைகள் தமிழகத்துக்குள் வந்து உயிரிழப்பதையும், வனத்துறையினர் கண்டறிந்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில், அவுட்டுக்காய் பயன்பாடு அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. அம்மாநில வனத்துறைக்கு இது குறித்து தெரிவிக்க ப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து கூட்டு ரோந்து, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அவுட்டுக்காய், நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். மீறி பயன்படுத்தினால் அவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றனர்.   

Tags:    

Similar News