உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களை வரவேற்கும் குழுவில் இடம் பெற்ற திருப்பூர் மாணவர்

Published On 2022-07-28 07:30 GMT   |   Update On 2022-07-28 07:30 GMT
  • தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார்.
  • கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.

அவிநாசி :

அவிநாசியிலுள்ள ஸ்ரீ ரமணசேவா ஆஸ்ரமம் குழந்தைகள் இல்லத்தில் தங்கி அருண்பாண்டி, நவீன் மற்றும் கவுதம் ஆகியோர் சேவூர் மற்றும் கருக்கன்காட்டுப்புதூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

3 பேரும் 20ந் தேதி நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்றனர்.இதில் 16 வயது பிரிவில், நவீன் முதலிடம், கவுதம் இரண்டாமிடமும், 16-18 வயது பிரிவில், அருண்பாண்டி மூன்றாம் இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து 25ம் தேதி அரசு பள்ளிகளிடையே மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் அருண்பாண்டி முதலிடம் பிடித்தார்.இதனால் அருண்பாண்டி, சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களை தமிழக அரசு சார்பில் தேசிய கொடியுடன் வரவேற்கும் குழுவில் இடம் பெற்றார். இதற்காக அவரை கல்வித்துறையினர் விமானம் மூலம் பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர்.

Tags:    

Similar News