உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி நடக்கிறது

Published On 2023-05-22 07:13 GMT   |   Update On 2023-05-22 07:13 GMT
  • தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது.
  • மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.

 திருப்பூர் :

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்கும் வகையில் யங் டீ அமைப்பு சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காபி வித் எக்ஸ்பெர்ட் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களை அழைத்து வந்து ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான, ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.

தலைமுறை இடைவெளி, குடும்ப தொழில் தொடர்பான புரிதல், சிக்கல் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான தீர்வுகள் குறித்து வாழ்வியல் பயிற்சியாளர் பேச இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News