உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த சாலையின் காட்சி.

உடுமலை உழவர் சந்தையில் நடைபாதையை சீரமைக்க கோரிக்கை

Published On 2023-09-12 07:06 GMT   |   Update On 2023-09-12 07:06 GMT
  • கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
  • சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

உடுமலை:

உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இது தவிர மலைப்பகுதியில் விளையக் கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய், உருளை மற்றும் சேனைக்கிழங்கு , நெல்லிக்காய் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.

இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

அதற்கு தகுந்தவாறு உழவர் சந்தை வளாகத்தில் கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாத தால் நடைபாதை முற்றிலும் சேதமாகி உள்ளது. அவற்றை சீரமைப்பதற்கும் அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள்- விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்ற விவசாயிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதற்கு உண்டான கோரிக்கையை விடுத்தும் இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.

எனவே முதல் கட்டமாக உழவர் சந்தை வளாகத்தில் சேதம் அடைந்த பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.    

Tags:    

Similar News