உள்ளூர் செய்திகள்

பார்சல் பெட்டியை திருடும் மர்ம நபர் சிசிடிவி காட்சி.

பல்லடம் கடைவீதியில் பார்சல் பெட்டியை திருடிய மர்ம நபர்

Published On 2023-06-06 17:26 IST   |   Update On 2023-06-06 17:26:00 IST
  • மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது.
  • சிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்லடம் :

பல்லடம் கடைவீதியில் உள்ள மளிகை கடைக்கு தனியார் லாரி மூலம் மளிகை பொருட்கள் அடங்கிய பார்சல் பெட்டி, மற்றும் 2 மூட்டைகள் வந்தது. அதிகாலை நேரம் வந்தது. அதனை லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கடை முன்பு இறக்கி வைத்து விட்டு அவர்கள் சென்று விட்டனர்.

இதன் பின்னர் கடைக்கு வந்த உரிமையாளர் பொருட்களை சரி பார்த்தபோது, சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மசாலா பொருட்கள் இருந்த பெட்டி காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து, கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த போது அதில் மர்ம நபர் ஒருவர் மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டியை திருடிச் செல்வது தெரிய வந்தது. இந்த நிலையில் பார்சல் பெட்டியை திருடும் மர்ம நபர் சிசிடிவி காட்சிகள், தற்பொழுது பல்லடம் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News