உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மாட்டின் உணவுக்குழாயில் சிக்கிய பீட்ரூட்

Published On 2022-08-17 13:33 IST   |   Update On 2022-08-17 13:33:00 IST
  • தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.
  • கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.இது குறித்து கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரிசோதித்த உதவி மருத்துவர் அறிவு செல்வன், உணவுக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும், பீட்ரூட் உணவு குழாயில் அடைத்திருப்பதாக தெரிவித்த அவர், மாட்டின் வாய்க்குள் கைகளை நுழைத்து முழு பீட்ரூட்டை வெளியே எடுத்தார். இதன்பின், மாடு சகஜ நிலைக்குத் திரும்பியது. உதவி மருத்துவர் கூறுகையில், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை முழுமையாக கால்நடைகளுக்கு உணவாக வழங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடும் கால்நடைகளின் உணவு குழாயில் அடைத்து கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தாகும் அபாயம் உள்ளது என்றார்.

Tags:    

Similar News