உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகளை லாரியில் அனுப்பி வைத்த போது எடுத்த படம்.

6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு

Published On 2023-09-02 09:45 GMT   |   Update On 2023-09-02 09:45 GMT
  • நேற்று 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
  • குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். மக்கும் குப்பையை உரமாக்கவும், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி பயன்பாட்டிற்காக அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நேற்று 6 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர். நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுத்து உதவ வேண்டுமாறு நகர்மன்ற தலைவர் மு. கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News