உள்ளூர் செய்திகள்

தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம். 

வெள்ளகோவிலில் ரூ.3.81 கோடியில் தினசரி மார்க்கெட் கட்டும் பணிகள் தீவிரம்

Published On 2023-05-04 11:20 IST   |   Update On 2023-05-04 11:20:00 IST
  • தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும்.
  • பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சியில் வாரந்தோறும் ஞாயிறு அன்று வார சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வசதிக்காக கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2021 -22, திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தினசரி மார்க்கெட்டில் 147 கடைகள் மற்றும் பாதுகாவலர் அறை, குடிநீர் வசதி, ஏடிஎம் அறை, உணவகம், கழிப்பறை, பாதுகாப்பு அறை, வாகன நிறுத்தம், சாலை வசதி ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த தினசரி மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரும்போது, வெயில், மழை காலங்களில் சிரமமின்றி வியாபாரம் செய்ய முடியும். இந்த பணியானது மே மாதம் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Tags:    

Similar News