உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2023-07-14 16:34 IST   |   Update On 2023-07-14 16:34:00 IST
  • நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • மூன்றாவது குடிநீா்த் திட்டத்தின் மூலமாக தடையின்றி குடிநீா் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் திருப்பூா் மாநகரில் வெள்ளி, சனிக்கிழமைகளில் ( ஜூலை 14, 15) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக மாநகரில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 14, 15) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதே வேளையில், மூன்றாவது குடிநீா்த் திட்டத்தின் மூலமாக தடையின்றி குடிநீா் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News