உள்ளூர் செய்திகள்

குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம்

Published On 2022-11-11 15:38 IST   |   Update On 2022-11-11 15:38:00 IST
  • ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது
  • அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிக்குட்பட்ட பொது மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி, மினிடேங்க் உள்ளிட்டவைகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில ஊராட்சிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீரை பரிசோதனை செய்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் சார்பில் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், சுகாதார குழு உறுப் பினர்களுக்கான குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் திருப் பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சங்கர், ஜே.மணவாளன் தலைமை வகித்தனர். ஐ.ஆர்.டி.டீ. நிறுவன செயலாளர் மனோ ரஞ்ஜிதம் வரவேற்றார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக பொறியாளர் பி.லதா பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். துணை நிர்வாக பொறியாளர் பர்குணன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். கிராம குடிநீர் மற்றும் சுகாதாரக்குழு உறுப்பினர்களுக்கு குடிநீர் பரிேசாதனை பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ராஜா, மற்றும் பரிசோதனை குழுவினர் மஞ்சுநாதன், திலகவதி, சர்மிளா, பாக்யா, மற்றும் உராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News