உள்ளூர் செய்திகள்

மகாராஷ்டிராவில் நடந்த தேசிய அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணியினர்.

ஸ்கேட்டிங் போட்டியில் தமிழக அணி சாதனை

Published On 2023-02-01 10:10 GMT   |   Update On 2023-02-01 10:10 GMT
  • மகாராஷ்டிராவில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள என்.ஐ.டி. இன்டர்நேஷனல் ஸ்கேட்டிங் ரிங்க்-ல் 22-ஆவது தேசிய அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்கள் பங்குபெற்றனர்.700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல பதக்கங்களை கைப்பற்றி சென்றனர்.

இதில் தமிழ்நாடு பதக்க பட்டியலில் முதலிடத்தில் பிடித்து அசத்தியது. தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் பிரபு அவரது பயிற்சி முறை மற்றும் காடின உழைப்பின் காரணமாக தங்கள் மாணவர்களை வெற்றி அடைய செய்துள்ளார். 200 மீட்டர், 300 மீ, 500 மீ, மற்றும் 1000 மீ போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில் ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் பயிலும் மாணவர் ஹரிஹரரூத்ரன் 4 தங்கம், யாஷ்ரிகா 3 தங்கம், ஈஷா 1 தங்கம், ஷஸ்விந்த் 1 வெண்கலம், பிரித்திஸ் 1 வெண்கலம், ருத்லக் 1 வெள்ளி, சூர்யா 1 தங்கம், சுதீப் 1 தங்கமும் வென்றனர்.

இதை தொடர்ந்து ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஷஸ்வத் 1 தங்கம், 2 வெண்கலம், ஜகன் பிரபு 1 தங்கம், திரன் பிரபு 1 வெண்கலம், ஹரிஹரன் 1 தங்கம், மற்றும் கனிஷ்கா 1 தங்கமும் பெற்றனர்.

மேலும் வாணியம்பாடியில் உள்ள விஸ்டம் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் உமர் அன்சர் 1 தங்கம், அலி அன்சர் 1 வெண்கலமும் பெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள நோட்ரே டேம் அகாடமி பள்ளி மாணவன் வருண் 1 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை பெற்று திருப்பத்தூர் மாவட்டதிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு ஸ்பீடு ஸ் கேட்டிங் அசோசியேசன் பொதுச் செயலாளர் திரு.முருகானந்தம், பொருளாளர் கௌதம், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபு மற்றும் பெற்றோர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News