ஏலகிரி மலையில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
ஏலகிரி மலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்
- நாட்டு நலப்பணி முகாம் நடந்தது
- மாணவிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
தமிழ்நாட்டில் மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு உயர்நிலை பள்ளிகள் 2 அமைந்துள்ளது.
ஏலகிரி மலை மாணவ மாணவிகள், ஜவ்வாது மலை பகுதிகளில் இருந்தும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் இப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் நாட்டு நலப்பணி முகாம் கடந்த 3-ந்தேதி உயர்நிலை பள்ளிகளில் நாட்டு நல திட்ட பணிகள் துவங்கப்பட்டது.
இந்த நாட்டு நலப்பணி திட்ட முகாம் 7 நாட்கள் நடைபெற உள்ளது. நாட்டு நலப்பணி திட்ட தூய்மை பணி, அத்தனாவூர் பகுதிகளில் மாரியம்மன் கோவில், பள்ளிகளில் அருகிலுள்ள நெடுஞ்சாலை பகுதிகளிலும், பெருமாள் கோவில் சாலைகளிலும் தூய்மை பணி, சாலை மேம்படுத்துதல், போன்ற பணிகள் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் விக்டோரியா அருள் ராணி, அருள் ஆரோக்கிய, நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பாபு, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தி வருகின்றனர்.