உள்ளூர் செய்திகள்
- உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூரை சேர்ந்த மாணவி ஒருவர் ஓசூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள அறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.