உள்ளூர் செய்திகள்

ஆம்பூரில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆய்வு செய்த காட்சி.

ஆம்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

Published On 2023-04-16 08:51 GMT   |   Update On 2023-04-16 08:51 GMT
  • 600 போலீசார் பாதுகாப்பு
  • ஊர்வலம் அமைதியாக நடத்திட ஆலோசனை

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள முருகன் சினிமா தியேட்டர் அருகில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் செல்லும் பாதையை திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் உட்பட போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 7 டிஎஸ்பிகள் 17 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். ஊர்வலம் அமைதியாக நடத்திட ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

மேலும் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் ஊர்வல பாதை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் ஆம்பூர் நகரம் முழுவதும் பரபரப்பாக உள்ளது.

Tags:    

Similar News