உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் கலெக்டர் அமர் குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றி ைவத்த காட்சி.

திருப்பத்தூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Published On 2023-01-26 15:12 IST   |   Update On 2023-01-26 15:12:00 IST
  • கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
  • மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது.இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி 44 லட்சத்து,31,418 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் போலீஸ் பிரிண்டர் பாலகிருஷ்ணன் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News