உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
திருப்பத்தூரில் பள்ளிகள் திறப்பு
- மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.
- நகரப்பகுதிகளில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மழலையர் பள்ளிகள் உட்பட மொத்தம் உள்ள 980 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
பள்ளிகள் திறப்பையொட்டி இன்று காலை முதலே சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது.
நகரப்பகுதிகளில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.கிராமப்புறங்களில் பள்ளி செல்ல வசதியாக சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.