உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் சீரங்கப்பட்டி அரசு பள்ளியில் ரூ.16½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள்எ நல்லதம்பி எம்.எல்.ஏ தொடங்கி வைத்த காட்சி.

திருப்பத்தூர் சீரங்கப்பட்டி அரசு பள்ளியில் ரூ.16½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள்

Published On 2022-11-26 15:27 IST   |   Update On 2022-11-26 15:27:00 IST
  • நல்லதம்பி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்த சீரங்கப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் தேவை என பொதுமக்கள் நல்லதம்பி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஒட்டி பள்ளியில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்ட ரூ.16.50 லட்சம் மதிப்பில் நல்லதம்பி எம்.எல்.ஏ தனது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கி பூஜை செய்து பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் வரவேற்றார், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார், வகுப்பறைகள் கட்டும் பணியை பூஜை போட்டு ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் விஜியாஅருணாச்சலம் துணைத் தலைவர் டி. ஆர். ஞானசேகரன், மாவட்ட பிரதிநிதி சரவணன், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் ஏ சி.சுரேஷ், ஜி.ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் துணை தலைவர் மதி நன்றி கூறினர்.

Tags:    

Similar News