உள்ளூர் செய்திகள்
திருமண ஆசை காட்டி மாணவி கடத்தலா?
- பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் தேடுதல் வேட்டை
ஆம்பூர்:
ஆம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது பெற்றோர் சென்னையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி கடந்த 30-ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் மாணவியை தேடியும் அவர் கிடைக்காததால் அவரது பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தனது மகளை திருமண ஆசை காட்டி வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருப்பதாக புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.