உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

Published On 2023-03-06 10:01 GMT   |   Update On 2023-03-06 10:01 GMT
  • வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
  • ஆம்பூர் டி.எஸ்.பி. அறிவுரை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னவரிகம் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனி உற்பத்தி தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்க ளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்து பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

பணிபுரியும் இடங்களில் ஏதேனும் மிரட்டல் விடுத்தாலோ தொல்லை கொடுத்தாலோ உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்ட காவல் துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள ஹெல்ப்லைன் சேவையை பயன்படுத்தி குறைகளை தெரிவிக்கலாம் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் வீண் வதந்திகளை நம்பி அந்த தகவலை மற்றவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் எவரேனும் தவறான கருத்துகள் மற்றும் வதந்தி பரப்பினால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்துக்கு உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி முன்னிலை வகித்தார்.

இதில் வடமாநில தொழிலாளர் 150 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News