உள்ளூர் செய்திகள்

22 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா

Published On 2022-08-03 09:17 GMT   |   Update On 2022-08-03 09:17 GMT
  • தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பல வருடங்களாக வீட்டு மனையின்றி 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டாவுடன், இலவச வீடும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவன், ஜமுனா இளவரசன் ஆகியோர் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு தலைவர் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜியிடம் பல வருடங்களாக கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் வீட்டுமனை இன்றி அரசு புறம்போக்கு இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து எம்எல்ஏ நடவடிக்கையால் இங்குள்ள பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 22 பயனாளிகளுக்கு நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலரும், மத்திய ஒன்றிய பொறுப்பாளருமான க.உமா கண்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட கழக பொறுப்பாளரும், தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது கட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன், ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம.அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News