உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் மணல் அள்ளும் பள்ளத்தால் மயானங்கள் சேதம்

Published On 2023-02-20 09:45 GMT   |   Update On 2023-02-20 09:45 GMT
  • மயானமே அழியும் நிலையில் உள்ளதாக புகார்
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பாலாற்றின் கரையில் சுடுகாடு உள்ளது. மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தை ஒட்டி சமத்துவ மயானம் அமைத்து இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.

இதே போன்று ஏற்கனவே சடலங்களை புதைத்த பழைய மயானத்தில் சமாதிகளில் ஒரே நேரத்தில் ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்தப் பகுதியில் திருட்டு மணல் அள்ள தோண்டும் பள்ளத்தால் சமாதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மயானமே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மணல் திருட்டையும் சமாதிகள் சேதப்படுத்துவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News