உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை தேவராஜ் எம்.எல்.ஏ. மீண்டும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

3 ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கம்

Published On 2023-03-16 09:47 GMT   |   Update On 2023-03-16 09:47 GMT
  • தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் பகுதியில் இருந்து சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் வரை சென்று கொண்டு இருந்த அரசு டவுன் பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த கோரிக்கை மனுவை ஏற்று எம்எல்ஏ தேவராஜ் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி புதிய அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதைதொடர்ந்து நேற்று நாட்டறம்பள்ளி அருகே சந்திரபுரம் பகுதியில் இருந்து வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் வரை அரசு டவுன் பஸ் 9A 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதன் பிறகு பஸ்ஸில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கு எம்எல்ஏ தனது சொந்த செலவில் டிக்கெட் பரிசோதகரிடம் பணம் கொடுத்து அனைவருக்கும் துவக்க விழா முன்னிட்டு இலவசமாக அனுப்பி வைத்தார்.

இந்த அரசு டவுன் பஸ் தினசரி காலை 6 மணியளவில் நாட்டறம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் பகுதியில் புறப்பட்டு புத்தகரம் சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு 7 மணிக்கு சென்று அடைகிறது.

மீண்டும் மாலை 6.15 மணியளவில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் புறப்பட்டு 7.15 மணியளவில் செட்டேரி டேம் சென்று அடைகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து தேவராஜ் எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர்.

விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மற்றும் திருப்பத்தூர் டெப்போ கிளை மேலாளர் மயில்வாகனம் துணை மேலாளர் வணிக ராஜராஜன் கோட்ட மேலாளர் கிருஷ்ணகிரி அரவிந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News