காட்பாடி தாலுகாவுக்கு வயது 25 ஆகிறது
- 2008-ம் ஆண்டு கட்டப்பட்டதாக அதிகாரி தகவல்
- அலுவலக கட்டடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலுார் மாவட்டத்தில் குடியாத்தம் தாலுகாவில் காட்பாடி இருந்து வந்தது. இதனால், காட்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பட்டா, சிட்டா, வருமானம் ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகளைப் பெற வேண்டும் என்றால், 31 கி.மீ. தொலைவில் உள்ள குடியாத்தத்துக்கு செல்லவேண்டி இருந்தது.
இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, 1998-ம் ஆண்டு குடியாத்தத்தில் இருந்து காட்பாடி யை பிரித்து தனி தாலுகா உருவாக்கப்பட்டது.
இதையடுத்து, சித்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பகுதியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், 2008-ம் ஆண்டு ரூ.ஒரு கோடியே 27 லட்சம் செலவில், காட்பாடி குடியாத்தம் சாலையில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது, காட்பாடி புதிய தாலுகா உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு அடைந்தது. இதையொட்டி அலுவலக கட்டடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம் கூறியதாவது:-
காட்பாடி புதிய தாலுகாவாக உருவாக்கப் பட்டு இன்றுடன் (நேற்று) 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தாலுகா பிரிக்கப்பட்ட நிகழ்வை வெள்ளி விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.