உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் திருவிழாவையொட்டி கோவில்களில் அம்மனுக்கு வித விதமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்த காட்சி.

திருப்பத்தூரில் 50 அம்மன் கோவில்களில் திருவிழா

Published On 2022-08-11 15:09 IST   |   Update On 2022-08-11 15:09:00 IST
  • கேரளா செண்டை, பம்பாய் என்று விதவிதமான மேளங்களுடன் கரகம் பவனி
  • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 50 மாரியம்மன் கோவில்களில் ஒரே நாளில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் பலவித அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்

அம்மன் கோவில்கள் திருவிழா

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும் ஆடி மாதம் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம் திருப்பத்தூர் சின்ன குளம் மாரியம்மன், கீழ்த்தெழு மாரியம்மன், பூங்காவனத்தம்மன் கோயில் மாரியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன், அங்கமுத்து மாரியம்மன், நொண்டி மாரியம்மன், எட்டி மாரியம்மன், புத்துமாரியம்மன், ஆதிபராசக்தி மாரியம்மன், உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் திருவிழா நடைபெற்றது

இதனை ஒட்டி அம்மனுக்கு ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ மீனாட்சி, தாய் மூகாம்பிகை, மகாலட்சுமி, முத்து மாரியம்மன் சரஸ்வதி குபேர லட்சுமி அங்காள பரமேஸ்வரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கஜலட்சுமி, துர்க்கை அம்மன், காளியம்மன், சமயபுரம் மாரியம்மன் அன்னபூரணி, உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்

தொடர்ந்து கூழ்வார்த்தல் மாவிளக்கு ஏங்கி வந்து பெண்கள் சாமிக்கு படைத்தனர். 12 அடி பூ கரகம் எடுத்து வந்தனர். வீட்டுக்கு வீடு பெண்கள் கற்பூரம் காட்டி வழிபட்டனர். திருவிழாவையொட்டி அனைத்து பகுதிகளிலும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது ‌

திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழாவை ஒட்டி கேரளா செண்டை, மேளம், பம்பாய் மேளம், ஒத்தையடி மேளம் நாசிக் தூள் பயர் டான்ஸ் தாரை தப்பட்டைகள் பம்பை ஊர்வலம் என விதவிதமான மேள தாளங்கள் அனைத்து தெருக்களிலும் கரகம் முன்பு அடித்துச் சென்றனர்.

அனைத்து தெருக்களும் வண்ண விளக்குகளால் அம்மன் படங்கள் ஒளிர்கின்றன, வானவேடிக்கைகள் இசைக்கச்சேரிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

Similar News