உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

ஏலகிரி மலை வெறிச்சோடியது

Published On 2023-03-20 09:56 GMT   |   Update On 2023-03-20 09:56 GMT
  • பொது தேர்வால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு
  • வியாபாரிகள், விவசாயிகள் வருமானமின்றி சிரமம்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலை 14 கிராமங்கள் கொண்டு நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு பசுமையாக காணப்படுகிறது.

இது பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் அருகில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுகள், செல்ஃபி பார்க், பறவைகள் சரணாலயம், சுவாமிமலை ஏற்றம், தாமரைக் குளம், ஸ்ரீ கதவ நாச்சியம்மன், நிலாவூர் ஏரி, ஆகியவை ஏலகிரி மலையில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இந்நிலையில் கோடைக்கால துவங்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வு நடைப்பெற்று கொண்டு இருக்கும் நிலையிலும் மேலும் மழையின் காரணமாக ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது.

இதனால் வார விடுமுறையான நேற்று மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஏலகிரி மலையில் விவசாயிகளும், வியாபாரிகளும் வருமானமின்றி சிரமத்திற்குள்ளாகினர்.

Tags:    

Similar News