உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
தகவல் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு
- திருப்பத்தூர் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் நடந்தது
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்:
தகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி மற்றும் லஞ்சம் தராமல் அரசு சேவை பெறுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் போஸ்கோ நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் கே.தயாநிதி தலைமை வகித்தார்.
பி.நலவேணி வரவேற்றார். சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில செயலாளர் கங்காதுரை, மாநிலத் துணைச் செயலாளர் கங்கா சேகர் ஆகியோர், பொதுமக்கள் தகவல் உரிமை பெறும் சட்டப் பயிற்சி மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இணையதளம் மூலம் புகார் அளிப்பது, லஞ்சம் தராமல் அரசு சேவைகளை பெறுவது எப்படி, காவல்துறையை சட்டப்படி அணுகுவது, பொதுநல வழக்குகள் தொடுப்பது உள்ளிட்டவை பற்றி விளக்கினர்.
நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் வினோதினி, சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.