உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மாய விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பொதுமக்களிடம் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.

விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து விடைபெற்ற கலெக்டர் அமர்குஷ்வாஹா

Published On 2023-02-08 10:17 GMT   |   Update On 2023-02-08 10:17 GMT
  • திருப்பத்தூர் மாவட்ட மக்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன்
  • பிரிவு உபசார விழாவில் கலெக்டருக்கு பரிசு வழங்கினர்

திருப்பத்தூர்:

வேலூரில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு 2-வது மாவட்ட கலெக்டராக அமர்குஷ்வாஹா (15.06.21) திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார்.

பின்னர் தமிழக அரசு புதிய கலெக்டராக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நியமித்தது உத்தரவிட்டதை தொடர்ந்து திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது மனைவியுடன் திருப்பத்தூர் மாய விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்னைக்கு சென்றார்.

கோவிலுக்கு வந்த கலெக்டரை என்விஎஸ் சங்க தலைவர் என்.பி..எஸ். ராஜா வரவேற்றார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம் அறங்காவலர் குழு உறுப்பினர் பக்தவச்சலம் வரவேற்றனர். மாய விநாயகர் கோவிலுக்கு கலெக்டர் மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவருக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பத்தூர் பொதுமக்கள் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களை மறக்க முடியாது என்றும் நினைவில் கொள்வேன் திருப்பத்தூர் மாவட்டத்தில் 20 மாத காலம் பல்வேறு பணிகள் மாவட்ட முழுவதும் நடைபெற்று உள்ளது.

பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளோம் விடைபெறுகிறேன் மீண்டும் சமூக நலன் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வரும்போது தங்களை சந்திப்பேன் என தெரிவித்தார்.

அவருடன் என்.வி.எஸ் சங்க நிர்வாகிகள் ஐயப்பன் ரமேஷ் குமார் ஹரி பிரபாகர், கமலக்கண்ணன் உட்பட பல கலந்து கொண்டனர். பின்னர் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் அனைத்து துறை சார்பில் கலெக்டருக்கு பாராட்டி பரிசு வழங்கினார்கள்.

Tags:    

Similar News