உள்ளூர் செய்திகள்

ஏலகிரிமலை 1000 ஆண்டு பழமையானது

Published On 2023-04-26 06:55 GMT   |   Update On 2023-04-26 06:55 GMT
  • ஆராய்ச்சி நடப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்
  • நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது

ஜோலார்பேட்டை:

க்ஷஏலகிரி மலையில் உள்ள கோடை விழா அரங்கத்தில் ஏலகிரி மலை மலைவாழ் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்ட மன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் வரவேற்றார்.

அமைச்சர் எ.வ.வேலு நல உதவி திட்டங்கள் வழங்கினார் அவர் பேசியதாவது:-

ஏலகிரி மலையானது 1000 ஆண்டுகள் பழைமையானது. இப்பகுதியில் வாழ்ந்த ஐந்நூற்றவர் வணிகக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் வணிகம் செய்து வந்தனர். கி.பி.10 நூற்றாண்டில், ஐந்நூற்றவன் மலையில் எள் உள்ளிட்ட எண்ணெய் தரக்கூடிய வித்துக்கள் எண்ணெய் எடுப்பதற்கான "கல்செக்கு" பயன்படுத்தியதற்கான சான்றுகள் கல்வெட்டில் உள்ளது.

முனைவர் க.மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக்குழு, வரலாற்று தடையங்களான கற்கோடாரிகள், கல்வெட்டுகள், நடுகற்கள் போன்ற தடயங்களை சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.

"உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற ஒரு துறையை உருவாக்கி அத்துறை மூலம் அனைத்து கோரிக்கைகளின் மீதும் தனி கவனம் செலுத்தி தீர்க்கப்படக் கூடிய கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றி தந்துள்ளார்.

Tags:    

Similar News