உள்ளூர் செய்திகள்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி
- பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
- பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (வயது19) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (22) கூலி தொழிலாளி.
இளம்பெண்ணும் மோகனும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதல் வீட்டில் தெரிய வரவே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.