உள்ளூர் செய்திகள்
தீயணைப்பு வீரரை பாம்பு கடித்தது
- பாம்பு பிடிக்க சென்றபோது விபரீதம்
- திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த கருப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோழனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நாகப் பாம்பு இருப்பதாக திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன், சிறப்பு நிலைய அலுவலர் முருகன் மற்றும் வீரர்கள் சென்று பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீயணைப்பு வீரர் சரவணன் (வயது 26) என்பவரை பாம்பு கடித்து விட்டது. சரவணன் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.
அவரை சகதீயணைப்பு வீரர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.